சென்னை: சென்னையில் பொது இடங்களில் கழிப்பறை இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கெனவே இயங்கி வந்த இ-டாய்லெட் பெரிதும் பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், மாநகராட்சியில் புதிதாக ஆயிரம் பேருந்து நிறுத்தங்களில் கழிப்பறைகள் கட்டப்படும் என சட்டமன்றத்தில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முதற்கட்டமாக ஆறு பேருந்து நிறுத்தங்களில் கழிப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி ரேஸ் கோர்ஸ், அண்ணா சதுக்கம், வேளச்சேரி விஜயநகர் ஆகிய இடங்களை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து சுமார் 4 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மேலும் அந்த பேருந்து நிறுத்தங்களில் விளம்பரங்கள் வைக்க அனுமதி வழங்கி, அதன் மூலம் வருவாய் ஈட்டவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க:'கொலைநகரமாக மாறும் தலைநகரம்' - முதலமைச்சரை தாக்கும் ஈபிஎஸ்