சென்னை: கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
15 மண்டலங்களில் தலா மூன்று குழுக்கள் வாரியாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு பணியை மாநகராட்சி அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு குழுவிலும் மாநகராட்சி, காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
நேற்றைய தினம் (ஜன.3) காலை, மாலையென இரு நேரங்களில் 23 குழுக்கள் மூலமாக அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 31ஆம் தேதி முதல் நேற்று வரை 2,603 பேரிடமிருந்து 5.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாத 1022 பேரிடம் 2.18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
15 மண்டலங்களில் அதிகபட்சமாக எட்டாவது மண்டலத்தில் 35 ஆயிரமும், அதற்கு அடுத்தபடியாக ஏழாவது மண்டலத்தில் 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக மண்டலம் ஒன்றில் 5300 ரூபாய் விதித்துள்ளதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: COVID 19 in TN: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 1,728 பேருக்கு கரோனா உறுதி