ETV Bharat / city

வடசென்னைக்கு கூடுதல் கவனம் - மாநகராட்சி ஆணையர் தகவல் - ககன்தீப் சிங் பேடி

கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட வடசென்னைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீர் இறைக்கும் மோட்டார்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

chennai floods, chennai corporation commissioner, Gagandeep Singh Bedi, chennai rains, corporation war room, மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை வெள்ளம், சென்னை பெருவெள்ளம், சென்னை மழை, ககன்தீப் சிங் பேடி
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி
author img

By

Published : Nov 18, 2021, 2:06 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சித் தலைமை அலுவலகம் அம்மா மாளிகையில் செயல்பட்டுவரும் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையத்தை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் ஆய்வுமேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளரைச் சந்தித்த அவர், "கனமழையால் மழை நீர் தேங்கக் கூடிய தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. மழையால் தேங்கும் நீரை வெளியேற்ற, 769 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன.

நவம்பர் 10ஆம் தேதிமுதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை அடுத்து, மாற்று வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்களுக்காக 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளன.

1913 கட்டுப்பாட்டு அறை, கன மழையை எதிர்கொள்ளும் வகையில் செயல்படுகிறது. 1913 என்ற எண்ணிற்கு ஒரே நேரத்தில் 50 நபர்கள் தொடர்புகொள்ளலாம் என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனைக் கண்காணிப்பதற்குத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

chennai floods, chennai corporation commissioner, Gagandeep Singh Bedi, chennai rains, corporation war room, மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை வெள்ளம், சென்னை பெருவெள்ளம், சென்னை மழை, ககன்தீப் சிங் பேடி
மழை வெள்ள பாதிப்பு கட்டுப்பாட்டு அறை

சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. வழக்கத்தைவிட கூடுதலாக 600 டன் முதல் 800 டன் வரை குப்பைகளை அகற்றி, தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பிற நகராட்சிகளிலிருந்து 500 தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தூய்மைப் பணி நடைபெற்றுவருகிறது" என்று தெரிவித்தார்.

மேலும், மழை நீர் கால்வாயில் கழிவு நீரை கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், இதுபோன்று தவறுகள் நிகழக்கூடிய இடத்திலுள்ள பொது மக்கள், மாநகராட்சியிடம் நேரடியாகப் புகார் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட வடசென்னைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், நீர் இறைக்கும் மோட்டார்களும் இங்குதான் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதையும் படிங்க: ரூ.500 கோடி மதிப்பிலான கிராவல் மண் எடுப்பு? - ஓபிஎஸ் மீது வழக்குப்பதிய கோரி நீதிமன்றத்தில் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.