ETV Bharat / city

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்ரல் ரயில் நிலையம் முற்றுகை! - குடியுரிமைத் திருத்தச் சட்டம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான சென்ட்ரல் தொடர்வண்டி நிலைய முற்றுகைப் போராட்டத்தில் தடுப்புகள் தூக்கி வீசப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

protest
protest
author img

By

Published : Dec 21, 2019, 1:27 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட ஏழு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, சென்னைப் புறநகர் தொடர்வண்டி நிலையம் அருகே குவிந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு கைகளில் கொடிகள், பதாகைகளுடன் மத்திய தொடர்வண்டி நிலையம் நோக்கி முன்னேறினர்.

அப்போது அவர்களை காவல் துறையினர் தடுத்ததால் சாலைத் தடுப்புகளைத் தூக்கி வீச முயன்றார்கள். அப்போது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மத்திய தொடர்வண்டி நிலையம் முற்றுகை

இதனைத் தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். இப்போராட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: கலவர பூமியான உத்தரப் பிரதேசம்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 21.12.19

5க்கும் மேற்பட்ட அமைப்புகள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென் ட்ரல் ரயில் நிலையை முற்றுகை போராட்டம்... போராட்டக்காரர்கள் பேரிக்கார்டு தடுப்புகளை தூக்கி எரிந்ததால் கூச்சல் குழப்பம், தள்ளு முள்ளு...

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. தமிழ்நாடு மாதர் சங்கம், தீண்டாமை முன்னணி, மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட 7 அமைப்புகளை சேர்ந்த ஏராமானோர் சென்னை செண்ட் ரல் ரயில் நிலையத்தை முற்றுகை யிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் குவிந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பிக்கொண்டு கைகளில் கொடிகள் பதாகைகளுடன் ரயில் நிலையம் நோக்கி முன்னேறினர். அப்போது அவர்களை தடுத்த காவல்துறையினர் மீது சாலைத் தடுப்புகளான பேரிக்கார்டுகளை தூக்கி வீச முயன்றதால், காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். இப்போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்..

tn_che_01_protest_against_cab_railway_station_attacked_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.