ETV Bharat / city

75-வது சுதந்திர தினம் - பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை விமான நிலையம்

author img

By

Published : Aug 9, 2022, 11:15 AM IST

Updated : Aug 9, 2022, 12:04 PM IST

நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமானநிலையத்தில் 75 வது சுதந்திர தின விழாவையொட்டி கூடுதல் பாதுகாப்பாக 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திரதின விழா வரும் ஆக.15 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையெடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி விமானநிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரயில், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமானநிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை நேற்று இரவிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை விமானநிலையம்

சென்னை விமானநிலையத்திற்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவாயிலில் நிறுத்தி, சந்தேகப்படும் வாகனங்களை, பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடுகின்றனா். வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா் மூலம் பரிசோதிக்கின்றனா்.

விமானநிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து பணியில் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். விமானநிலைய காா் பாா்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் காா்களை வெடிகுண்டு நிபுணா்கள் திவீரமாக சோதனையிட்டு விசாரிக்கின்றனா்.

சென்னை விமானநிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே அமுலில் இருப்பதால்,அதை மேலும் தீவிரமாக செயல்படுத்துகின்றனா்.

விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கின்றனா்.

பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை விமான நிலையம்

விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக, பயணிகள் எடுத்து வரும் கைப்பைகளை துருவித்துருவி சோதிக்கின்றனா்.

முக்கியமாக பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து,பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப்பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.

விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வர சென்னை விமானநிலைய அதிகாரிகள் பயணிகளை அறிவுறுத்தியுள்ளனா். சென்னை விமானநிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 20 ஆம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும், தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 13,14,15 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனா்.

இதையும் படிங்க: மாணவர்களை போல பள்ளி சீருடையில் வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்!

Last Updated : Aug 9, 2022, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.