ETV Bharat / city

அரசு பேருந்து நிறுத்தம் எதிரொலி- விண்ணை தாண்டிய விமான டிக்கெட் விலை! - passenger are in difficult

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து துறை முடங்கியதால், சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களுக்கு செல்லும் விமான பயண டிக்கெட் கட்டணம் திடீா் உயா்வால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

அரசு பேருந்து நிறுத்தம் எதிரொலி- விண்ணை தாண்டிய விமான டிக்கெட் விலை!

author img

By

Published : Mar 28, 2022, 10:54 PM IST

சென்னை:நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் இன்று,நாளை (மார்ச் 28 & 29 )ஆகிய இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.இதனால் அரசு போக்குவரத்து துறை தொழிலாளர்கள் பெருமளவில் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து அரசு போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.மிகவும் குறைந்தளவு வாகனங்கள் இயக்கப்படுவதோடு, தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே சாலை மறியலிலும் ஈடுபடுவதால், வெளியூர் செல்லும் பயணிகள் சாலை வழியாக செல்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்று கருதுகின்றனர். எனவே வெளியூர் செல்லும் பயன்கள் குறிப்பாக சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், விமான பயணத்தை நாடியுள்ளனா்.

இதனால் விமான பயணிகளின் எண்ணிக்கை குறிப்பாக தூத்துக்குடி,மதுரை,திருச்சி,கோவை பயணிகள் அதிகரிப்பால், சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் விமானப் பயணக் கட்டணம் என்று திடீரென ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமான கட்டணம் வழக்கமாக ரூ.4,500. ஆனால் இன்றைய தினம் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்கு உயர்ந்தபட்ச கட்டணமாக 9.662.

அதேபோல் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு வழக்கமான கட்டணம் ரூ.4500. ஆனால் இன்றைய தினம் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு கட்டணம் ரூ.8,262.

வழக்கமான கட்டணங்களை விட அதிகம்: மேலும் சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்கு வழக்கமான கட்டணம் ரூ.3,700. கட்டணம். ஆனால் இன்றைய விமானக் கட்டணம் ரூ.5042. அதேபோல் சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு வழக்கமான கட்டணம் ரூ.3,900. ஆனால் இன்று ரூ.4,617 என உயர்ந்து காணப்படுகிறது.

விண்ணை தாண்டிய விமான டிக்கெட் விலை
விண்ணை தாண்டிய விமான டிக்கெட் விலை

இதுபற்றி விமான நிறுவனங்கள் தரப்பில் விசாரித்தபோது, போக்குவரத்துதுறை வேலை நிறுத்தத்திற்கும்,விமான கட்டணத்திற்கும் சம்பந்தம் இல்லை. விமான கட்டணம் பல அடுக்குகள் முறையில் உள்ளது.அதில் குறைந்த கட்டண விமான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனையாகிவிட்டன.

இறுதி நேரத்தில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு அதிகப்பட்ச கட்டண டிக்கெட்டுகள் உள்ளதால்,அவைகளை கொடுக்கிறோம்.இது வழக்கமானது தான்.ஆனால் இன்று பொது வேலை நிறுத்தம்,பஸ்போக்கு ரத்து பாதிப்பும் சோ்ந்துவிட்டதால்,அதனால் தான் கட்டணம் உயா்ந்துவிட்டதாக பயணிகள் கருதுகின்றனா் என்று கூறுகின்றனா்.

ஆனால் பயணிகள் தரப்பில்,இதை மறுக்கின்றனா்.பொதுவாக பண்டிகை காலங்களில் அல்லது வீக்எண்ட் வெள்ளி,சனியில் கட்டணம் சற்று உயர்வது வழக்கம்.ஆனால் வாரத்தின் முதல் நாளான திங்கள் அன்று இந்த திடீா் கட்டண உயா்வு போக்குவரத்து துறை வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட உயா்வு என்றுதான்,நாங்கள் கருதுகிறோம் என்று கூறுகின்றனா்.

இதையும் படிங்க:இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி, இன பிரச்னையுடன் பின்னிப் பிணைந்துள்ளது - சிவஞானம் சிறீதரன், எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.