சென்னை: சென்னையின் மக்கள் தொகை பெருக்கம் நகரமயமாதல் உள்ளிட்ட காரணங்களுக்காக நிர்வாக வசதி கருதி தமிழ்நாடு முதல்வர் சென்னைக்கு மேலும் இரண்டு புறநகர் காவல் ஆணையர் அலுவலகங்கள் அமைக்க உத்தரவிட்டார்.
ஆணையரங்களை அமைப்பதற்காக சிறப்பு அலுவலர்களாக ஏடிஜிபி ரவி மற்றும் ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமிக்கப்பட்டு தாம்பரம் ஆணையராக பணிகளை ஏடிஜிபி ரவியும் ஆவடி ஆணையரக பணிகளை ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மேற்கொண்டனர்.
அதன்படி கடந்த நான்கு மாதங்களாக காவல் நிலையங்களை இணைத்தல் புதிய ஆணையரகம் உருவாக்குவதற்கான பணிகள் காவல் மாவட்டங்களை உருவாக்குவது என அந்த பணிகளில் ஈடுபட்டு அனைத்தையும் முடித்துள்ளனர்.
ஆவடி காவல் ஆணையரகம் ரெட்டில்ஸ் மற்றும் ஆவடி என இரண்டு காவல் மாவட்டங்களை உள்ளடக்கி 5 துணை ஆணையர்கள் இரண்டு இணை ஆணையர்கள் என இன்று முதல் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு மொத்தமாக 25 காவல் நிலையங்கள் இந்த கட்டுப்பாட்டில் செயல்பட உள்ளன.
ஆவடி பேருந்து நிலையம் அருகே உள்ள மாநில பேரிடர் மீட்புப் பணிகளுக்கான அலுவலகத்தில் இந்த ஆணையரகம் திறந்து வைக்கப்பட்டது.
இதையும் படிங்க:புத்தாண்டு 2022: 'சகோதரனாக' ஸ்டாலின் விடுத்த அன்புக் கட்டளை