சென்னையில் கரோனா பரவலை தடுக்கும்விதமாக கடந்த 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கானது அமலில் இருந்துவருகிறது. முழு ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்திருந்தார். அத்தியாவசிய தேவைகள் தவிர, அநாவசியமாக வாகனங்களில் வெளியே சுற்றும் நபர்களை பிடித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து வாகனங்களையும் பறிமுதல் செய்துவருகின்றனர்.
கடந்த ஆறு நாள்களில் மட்டும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 33 ஆயிரத்து 663 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியதாக 30 ஆயிரத்து 419 வாகனங்களை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதவிர, முகக்கவசம் அணியாமல் மற்றும் தகுந்த இடைவெளி பின்பற்றாமல் வெளியே சுற்றியதாக 15 ஆயிரத்து 216 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இன்று ஒரேநாளில், ஊரடங்கை மீறியதாக 6,287 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 6,603 வாகனங்களையும் காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க:வனவிலங்குகளை வைத்து டிக்டாக் செய்த இளைஞர்கள் மீது வழக்கு!