ETV Bharat / city

செங்கல்பட்டு மருத்துவப் பூங்கா பணிகள் தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijayabaskar
author img

By

Published : Nov 21, 2019, 5:57 PM IST

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையின் 200ஆவது ஆண்டு நினைவு வளைவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட எலியட்ஸ் அருங்காட்சியகத்தை மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர் நேற்று திறந்துவைத்தார். அப்போது, ரூ. 66 கோடியில் எழும்பூர் கண் மருத்துவமனைக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், ”எழும்பூர் கண் மருத்துவமனையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை, மருத்துவ மாணவர்களின் படிப்புக்கு உதவும் வகையில், மருத்துவர்களுக்கான சுற்றுலா இடமாக மாற்றுவதற்கு விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும்.

எழும்பூர் கண் மருத்துவமனை புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் விஜய பாஸ்கர்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், 88 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்றாவது அடுக்கு மாடிக் கட்டடத்தை, முதலமைச்சர் விரைவில் திறந்து வைப்பார். அரசின் அழுத்தம் காரணமாகவே, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் எவ்வித தொய்வும் இல்லாமல் நடைபெறுகிறது.

செங்கல்பட்டில் மருத்துவத் துறைக்கு தேவைப்படும் உபகரணங்களைத் தயாரிக்க, மருத்துவப் பூங்கா அமைக்க வேண்டுமென்பது முதல்வரின் கனவுத் திட்டம். அதற்கான பணிகளும் நடைபெற்றுவருகின்றன. தமிழ்நாட்டில் மருந்துத் தட்டுப்பாடுகள் ஏதுமின்றி போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது” என்று தெரிவித்தார்.

Intro: எழும்பூர் கண் மருத்துவமனையின் அருங்காட்சியகத்தை
மருத்துவ மாணவர்கள் பார்வையிட அரசு ஆணை

Body:சென்னை,

எழும்பூர் கண் மருத்துவமனையில் 200 ஆவது ஆண்டு நினைவு வளைவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட எலியட்ஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். மேலும் 66 கோடியில் எழும்பூர் கண் மருத்துவமனைக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

எலியட்ஸ் அருங்காட்சியகத்தில் மருத்துவமனை துவக்கப்பட்ட பொழுது பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில் பிரிட்டிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண் அறுவை சிகிச்சை கருவிகள், அவர்கள் பயன்படுத்திய மேஜை நாற்காலிகள், கண்களின் செயற்கை வடிவமைப்புகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 200 ஆம் ஆண்டு நிறைவு விழா மலரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் நிறைவு ஆண்டில் சிறப்பம்சமாக 66 கோடி மதிப்பீட்டில் அதிநவீன கட்டிடம் கட்டப்பட உள்ளது.

எழும்பூர் கண் மருத்துவமனையில் அமைந்துள்ள அருங்காட்சியகம் நல்ல முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் மருத்துவ மாணவர்களின் படிப்புக்கு உதவும் வகையில் மருத்துவர் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 88 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்றாவது அடுக்கு மாடிக் கட்டிடத்தை முதலமைச்சர் விரைவில் திறந்து வைப்பார்.

தமிழக அரசின் அழுத்தத்தின் காரணமாக தான் வளர்ந்த நாடுகளில் தமிழகம் இருந்தாலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. என்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளில் எந்தவித தொய்வும் இல்லாமல் நடைபெறுகிறது. மத்திய அரசு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

செங்கல்பட்டில் மருத்துவத்துறைக்கு தேவைப்படும் உபகரணங்களைத் தயாரிக்கக் மருத்துவப் பூங்கா அமைக்க வேண்டும் என்பது முதல்வரின் கனவு திட்டம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மருந்து கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது என தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.