மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியானது, ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் ஜூன் மாதம் தொடங்கி ஜூலை மாதம்வரை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டுகட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி நடத்தப்படவுள்ளது.
- வீடுகளை கணக்கெடுப்பது
- மக்கள் தொகை எண்ணிக்கையை கணக்கெடுப்பது
வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்? பெயர், படிப்பு, வேலை, திருமணம் ஆனவர்களா? குழந்தைகளின் விவரம் உள்ளிட்ட 28 கேள்விகள் கேட்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த காலங்களில் காகித முறையில் நடைபெற்றுவந்த கணக்கெடுப்புப் பணி இந்த முறை முதல்முறையாக எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தில் கைப்பேசி செயலி மூலமாக நடத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு மேலும் மூன்று பேர் கைது
இத்திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை நடந்தது. இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலர் சண்முகம் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.