சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "காமராஜ் போன்ற தலைவர்கள் இருந்த இடத்திற்கு வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு நீங்கள் பேசும் மொழி புரியவில்லை என்றாலும், உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் வெளிக்கொணரும் அன்பு எனக்கு நன்றாகப் புரிகின்றது.
பணம் மதிப்பிழப்பின்போது எவ்வாறு மக்கள் தெருவில் நின்று துன்பம் அடைந்தார்களோ, அதேபோல் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை மிகப்பெரிய துன்பத்தில் ஆழ்த்தும். அப்பா, அம்மா பொதுவாக பிள்ளைகளுக்கு பிறந்த சான்றிதழ் வாங்குவார்கள். ஆனால் இந்தச் சட்டத்தினால் பிள்ளைகள் அப்பா, அம்மாவிற்கு பிறப்புச் சான்றிதழ் வாங்கும் நிலை வந்துள்ளது.
நீதிமன்ற அனுமதிக்காக காத்திருக்கும் சேவல் சண்டை
மோடி, அமித்ஷா இருவரும் பொய்யர்கள். ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலம் நாட்டில் நிம்மதி இல்லையென்றால் அதற்கு மோடி, அமித் ஷாதான் பொறுப்பு. குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்த பிறகு பிரதமர் மோடியால் வெளிநாட்டிற்குச் செல்ல முடியவில்லை. அதேபோல, வெளிநாடு அதிபர்கள் இந்தியா வருவது இல்லை. மோடியால் உலக வரைபடத்தில் இந்தியாவிற்கு கெட்ட பெயர் வந்துள்ளது” என்றார்.