சென்னை: தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி முதல்கட்டமாக, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை அறிதல், வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்தல், பழுது பார்ப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதனிடையே, சீனாவில் கடந்த ஒருவாரமாக கரோனா தொற்றுபரவல் அதிகரித்துவருவதால், பல்வேறு மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உருமாற்றமடைந்த ஏஒய்.4.2(AY.4.2) என்ற கரோனா வைரஸ் பரவியுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிராவிலும் இந்த வைரஸ் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. ஏஒய்.4.2 வைரஸ், கரோனாவைவிட 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதுஒருபுறமிருக்க, ஏஒய்.4.2 கரோனா வைரஸ், பெங்களூருவில் 7 பேருக்கு பரவியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விரைவில் அறிவிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு: கர்நாடகாவில் 7 பேருக்கு புதிய வகை கரோனா: அதிகரிக்கும் 3ஆம் அலை அச்சம்!