இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய மேற்கு வங்கக் கடல், ஆந்திரா, ஒடிசா கடற்கரை மற்றும் அதையொட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக, ஜூன் 11 மற்றும் 12ஆம் தேதி மன்னார் வளைகுடா, வட தமிழ்நாடு, ஆந்திர கடலோரப் பகுதிகளின் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதி உள்ளிட்ட பகுதிகளில், பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்.
அதேபோல் ஜூன் 11 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரையிலும், மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளில், பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரையிலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், ராயபுரம், பல்லாவரம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
இதையும் படிங்க: ஈரோட்டில் இடியுடன் கூடிய கனமழை!