ETV Bharat / city

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

WEATHER
WEATHER
author img

By

Published : May 25, 2022, 7:25 PM IST

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை(மே26) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் 27-ம் தேதி ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 9 சென்டி மீட்டர் மழையும், அரியலூரில் 6 சென்டி மீட்டர் மழையும், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே நீர் திறப்பு - விவசாயிகளுக்கு சாதகமானதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.