ETV Bharat / city

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு! - Northeast monsoon

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chance of rain in Tamil Nadu
Chance of rain in Tamil Nadu
author img

By

Published : Sep 18, 2020, 4:20 PM IST

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வடகிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்" எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது. மேலும் வட கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 20ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

அதனால் இன்று(செப்.18) முதல் 26ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளிலும், அந்தமான் கடல் பகுதிகளிலும் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதேபோல செப்டம்பர் 19ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளிலும், செப்டம்பர் 20ஆம் தேதி தெற்கு வங்ககடல், மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும்.

செப்டம்பர் 21ஆம் தேதி தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, வட கிழக்கு வங்க கடல் பகுதிகளிலும், செப்டம்பர் 22ஆம் தேதி வடக்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக் கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

அதையடுத்து கேரளா, கர்நாடக, லட்சத்தீவு, மத்திய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.