ETV Bharat / city

T23 புலியைச் சுட்டுக்கொல்வதா? - இன்று வழக்கு விசாரணை - T23 tiger case

நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியான T23யை வேட்டையாடப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு இன்று (அக்டோபர் 5) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

T23 புலியைச் சுட்டுக்கொல்வதா
T23 புலியைச் சுட்டுக்கொல்வதா
author img

By

Published : Oct 5, 2021, 7:31 AM IST

Updated : Oct 5, 2021, 7:47 AM IST

சென்னை: நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன் தனியார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (51) என்பவரை செப்டம்பர் 24ஆம் தேதி தாக்கி கொன்ற புலியை, மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதுவரைப் புலியைப் பிடிக்க முடியவில்லை.

புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பது உள்பட அதை வேட்டையாடுவதற்கான உத்தரவை முதன்மைத் தலைமை வன உயிரினப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் பிறப்பித்துள்ளார். இதனை எதிர்த்து உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா டோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்தார்.

அவர் தாக்கல்செய்த மனுவில், குறிப்பிட்ட அந்தப் புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை வனத் துறை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நேற்று (அக்டோபர் 4) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கை இன்று விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல வேண்டிய சூழல் - ஓசை காளிதாஸ் பேட்டி

Last Updated : Oct 5, 2021, 7:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.