சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு அது தொடர்பாக பொது மக்கள் மெயில் மூலமாக கருத்துக்களை தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மீனவ தந்தை கே.ஆர் செல்வராஜ் குமார், மீனவர் நல சங்கம் அமைப்பின் தலைவர் தியாகராஜன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23 ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, ஏப்ரல் 11 இல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிட்டு, அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை பொது மக்கள் தெரிவிக்க தற்போது அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையது அல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனு இன்று (ஆகஸ்ட் 6) நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதை சுட்டிக்காட்டி வரைவு அறிக்கை நடவடிக்கைக்குத் தடை விதிக்க மறுத்து, விசாரணையை நாளை (ஆகஸ்ட்.7) ஒத்திவைத்த நீதிபதிகள், அப்போது மத்திய அரசு சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிக்கை: மாநில மொழிகளில் வெளியிடும் வரை தடை விதிக்க முடியாது! - மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
சென்னை: சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வெளியிடும் வரை அதனை செயல்படுத்தத் தடை விதிக்க உத்தரவிட முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.