ETV Bharat / city

ஆர்.எஸ். பாரதியின் பிணையை ரத்துசெய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன்?

சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்துசெய்ய அரசு அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

dmk
dmk
author img

By

Published : Jun 16, 2020, 11:55 AM IST

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து தவறான கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் ஆர்.எஸ். பாரதி கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவருக்குப் பிணை வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தப் பிணையை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், கடும் நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் ஆர்.எஸ். பாரதிக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாகவும், தொற்று நோய் பரவலைக் காரணம் காட்டி பிணை வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக ஆர்.எஸ். பாரதி கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சதீஷ் குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு கவனிக்க வேண்டியவை ஏராளமாக உள்ள நிலையில், ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்துசெய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பி, விசாரணையை ஜூன் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: ஓபிசி இட ஒதுக்கீடு: மத்திய அரசு அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.