அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள்(45), மளிகைக் கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பேச்சியம்மாளைத் தாக்கி, அவரிடமிருந்த ஏழு சவரன் நகையைப் பறிக்க முயன்றனர். ஆனால், அதில் கையில் சிக்கிய மூன்று சவரன் நகையை மட்டும் பறித்துச் சென்று விட்டனர்.
இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, அம்பத்தூர் உதவி ஆணையர் கண்ணன், உதவி ஆய்வாளர் முபாரக் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் ஒரு பெண்ணும், ஆணும் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அயனாவரத்தைச் சேர்ந்த ரேவதி(37), என்றப் பெண்ணைக் கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் காவல் துறையினருக்குக் கிடைத்துள்ளது.
திருமணம் ஆசையால் பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் இழந்தவர் புகார்!
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறும்போது, ' சம்பவம் நடந்த பிறகு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 64 கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, தலைக்கவசம் அணிந்து கொண்டு ஒரு பெண்ணும், பின்னால் ஒரு இளைஞரும் அமர்ந்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து கண்காணித்த போது அந்த வாகனத்தின் எண்ணை வைத்து பார்த்த போது அது போலியானது என தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நபரின் முகத்தை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டது ரேவதியும் அவரது மைத்துநர் என்பதும் தெரிய வந்தது. ரேவதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். தற்போது இந்த வாகனங்களுக்கு மாதத் தவணை கட்ட முடியாததால், ஐசிஎப் மெயின் ரோட்டுப் பகுதியில் காலையில் டிபன் கடை நடத்தி வருவதும்; அதன்பிறகு தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.