ETV Bharat / city

மது அருந்திக்கொண்டிருந்தவரிடம் தங்கச்சங்கிலி பறிப்பு - போலீஸ் விசாரணை

மதுபானக்கடை அருகே மது அருந்திக்கொண்டிருந்தவரிடம், அடையாளம் தெரியாத மூன்று பேர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டனர்.

chain
chain
author img

By

Published : Aug 28, 2022, 5:42 PM IST

சென்னை: சென்னை கொளத்தூர் திருமலைநகர் பகுதியைச்சேர்ந்த கோகுலகிருஷ்ணன்(31) என்பவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்றிரவு(ஆக.27) கோகுலகிருஷ்ணன் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, வனசக்தி நகர் மதுபானக்கடையில் மது அருந்தி உள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் மதுபான கடைக்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், கோகுலகிருஷ்ணனை அடித்து கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதில் கோகுல கிருஷ்ணனுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து கோகுல கிருஷ்ணன் அளித்தப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மாதவரம் காவல் நிலைய போலீசார், சிசிடிவி காட்சிகளைக்கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: லட்சக்கணக்கில் கலப்பட டீசல் விற்பனை... திமுக வார்டு கவுன்சிலரின் கணவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.