சென்னை : தமிழ்நாட்டில் வெள்ள சேத பாதிப்புகள் குறித்து முழுமையான ஆய்வுக்கு பிறகு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மத்திய குழு தலைவர் ராஜீவ் சர்மா (Rajiv Sharma) தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு வந்துள்ளனர். இவர்கள் நாளை (நவ.22) காஞ்சிபுரம் செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) டெல்டா மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க : Tirupattur Floods: வீடுகளில் புகுந்த வெள்ளநீர்; கண்டுகொள்ளாத அரசு - சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்