ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்று காலை நேரில் தந்த அவரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர் ஒத்திகை மையத்தில் அமைக்கப்பட்டிருந்த காத்திருக்கும் அறை, கோ-வின் செயலியை கையாளுவதற்கான பயனாளர் உறுதிப்படுத்தும் அறை, தடுப்பூசி செலுத்தும் அறை, கண்காணிப்பு அறை, குளிரூட்டிகள் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அங்கிருந்த மருத்துவர்களும், செவிலியர்க்கும் விளக்கமளித்தனர்.
தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதற்கான போதுமான இட வசதி, 2 மணி நேரத்தில் 25 பயனாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான கட்டமைப்புகள், தடுப்பூசி செலுத்தப்பட்ட பயனாளர்களுக்கு உடனடி பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கான முதலுதவி சிகிச்சைகள், பயனாளர்களின் விவரங்களை கையாளும் கோ-வின் செயலி மூலம் பயனாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்டவை இந்த ஒத்திகையின் போது சரிபார்க்கப்பட்டது.
மேலும், கரோனா சிகிச்சை மைய சிடி ஸ்கேன் கூடத்தையும், கரோனாவிற்கு பிந்தைய சிகிச்சை மையத்தில் வழங்கப்படும் யோகாசன பயிற்சியையும் அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் ஹர்ஷவர்தன், அம்மா முழு உடல் பரிசோதனைக் கூடம், கரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ பெட்டகங்கள், மருத்துவ ஆய்வகம் உள்ளிட்டவற்றை அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து பார்வையிட்டார்.
பின்னர், கரோனா தீவிர காலத்தில் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அவசர ஊர்திகளின் பயன்பாடு, கரோனா பரிசோதனைகள் குறித்து எல்.ஈ.டி திரையில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு காண்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விரைவில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி! - ஹர்ஷவர்தன்!