ETV Bharat / city

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? - மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் அகவிலைப்படி 3 சதவீதம் டிஏ (Dearness Allowance) உயர்வு இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

author img

By

Published : Mar 6, 2022, 8:05 AM IST

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி டிஏ (Dearness Allowance) உயர்வுக்காக பல வாரங்களாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த மாதம் அகவிலைப்படி 3 சதவீதம் வரை டிஏ உயர்வு இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்பட மத்திய அரசு ஊழியர்கள் ஒருகோடிக்கும் அதிகமானோர் பயன் பெறுவார்கள்.

2022, ஜனவரி 1 முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும் எனத் தெரிகிறது. தற்போது 31 சதவீதம் அகவிலைப்படி டிஏ பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் உயர்த்தப்படும்போது, 34 சதவீதமாக அதிகரிக்கும். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயரும். 34 சதவீதமாக டிஏ உயர்த்தப்படும் பட்சத்தில், அடிப்படை ஊதியம் பெறுபவர்கள் முதல் உயர் அலுவலர்கள் பணியில் இருப்பவர்கள் வரை அனைவரின் ஊதியமும் உயரும்.

அகவிலைப்படி டிஏ (Dearness Allowance) என்றால் என்ன?

அகவிலைப்படி (Dearness Allowance) என்பது அரசு ஊழியர்களின் வாழ்க்கை செலவை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் பணம். பணவீக்கம் உயர்ந்த பிறகும், ஊழியர்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்படாமல் இருக்க, இந்தப் பணம் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பணம் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: இதுவரை உக்ரைன் மாணவர்களை மீட்க ரூ. 3.50 கோடி ஒதுக்கியுள்ளோம் - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.