ETV Bharat / city

இந்தியா முழுவதும் 240 பிராங்க் வீடியோ தொடர்பான வழக்குகள் பதிவு - Tamil prank videso YouTube channels

பிராங்க் என்ற பெயரில் தனிமனித சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் யூ-டியூப் சேனல்களை கண்காணித்து, அந்த சேனல்களின் பட்டியலை தயாரித்து கணக்கெடுக்கும் பணிகளில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா முழுவதும் 240 பிராங்க் வீடியோ தொடர்பான வழக்குகள் பதிவு

author img

By

Published : Sep 8, 2022, 12:07 PM IST

சென்னை: சமீப காலமாக யூ-டியூபர்ஸ் தனிமனித சுதந்திரத்தை கெடுக்கும் வகையிலும், பொதுமக்களை தொந்தரவு செய்து மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பிராங்க் வீடியோஸ் என்ற பெயரில் வீடியோக்களை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, நகைச் சுவையாக என்று சொல்லிக்கொண்டு பொதுமக்களை அழ வைப்பது, கோபப்படுத்துவது உள்ளிட்டை செயல்களை செய்துவருகின்றனர். இதுபோன்று பிராங்க் வீடியோக்களுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக கண்டனத்தை புகாரையும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, Love Proposal Prank என்கிற பெயரில் பெண்களிடம் காதல் சொல்வது, அதை அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து வெளியிடுவது, முதியவர்களை துன்புறுத்தும் வகையில் தண்ணீர் பாக்கெட்டுகளை எறிவது, போதை ஆசாமிபோல் நடித்து பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பது போன்ற சர்ச்சைக்கூறிய வகையில் நிறைய பிராங்க் வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று சிலர், இளம் பெண்களிடம் ஆபாசமான கேள்விகளைக் கேட்டும் அதிருப்தி ஏற்படுத்திவருகின்றனர். இதுபோன்ற விவகாரத்தில் தனியார் யூ-டியூப் சேனல் உரிமையாளர் தினேஷ், தொகுப்பாளர் ஆசன் பாத்சா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகிய 3 பேர் ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிராங்க் வீடியோக்கள் எடுத்து அவர்களது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் செயல்களில் ஈடுபடும் யூ-டியூபர்ஸ் மீது புகார் அளிக்கப்பட்டால் குற்ற வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிராங்க் வீடியோக்கள் மீது அதிகப்படியான புகார்கள் குவிந்து வரும் நிலையில், சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்ட யூ-டியூப் சேனல்களை கண்காணித்து அத்துமீறல்களில் ஈடுபடும் சேனல்களின் பட்டியலை கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தேசிய குற்ற ஆவண காப்பகம், கடந்தாண்டு மட்டும் இந்தியா முழுவதும் சர்ச்சைக்குரிய பிராங்க் வீடியோக்கள் எடுத்து தங்களது யூடியூப் சேனல்களில் பதிவிட்டதாக சைபர் கிரைம் போலீசார் 240 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அதில் தமிழ்நாட்டில் 8 வழக்குகளும், சென்னையில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. .

இன்று சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பிராங்க் வீடியோக்கள் எடுத்து பதிவிட்டு வரும் 5 யூ-டியூப் சேனல்களை முடக்க வலியுறுத்தியும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ரோஹித் குமார் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதில், குறிப்பாக 1. கட்டெரும்பு, 2. குல்பி, 3. ஆரஞ்சு மிட்டாய், 4. ஜெய் மணிவேல் மற்றும் 5. நாகை 360° ஆகிய 5 யூ-டியூப் சேனல்கள் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காணாமல்போன பூனை - கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.