ETV Bharat / city

Velacherry Accident CCTV: பேருந்து மோதி பெண் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி - சென்னை விபத்து

சென்னை வேளச்சேரியில் சைக்கிளில் சென்ற பெண் மீது தனியார் பேருந்து மோதியதில், பேருந்தின் முன் சக்கரம் பெண் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Velacherry Accident CCTV Video, வேளச்சேரி விபத்து சிசிடிவி காட்சிகள்
Private bus collides with woman on bicycle
author img

By

Published : Nov 23, 2021, 11:31 AM IST

சென்னை: வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள குருநானக் கல்லூரிக்கு அருகே சைக்களில் பெண் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் வந்த தனியார் டிராவல்ஸ் பேருந்து பெண் மீது மோதியது.

அந்தப் பேருந்தின் வலதுபக்க சக்கரம் ஏறியதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த பெண்ணின் பெயர் சங்கீதா என்பதும் அவர் வீட்டு வேலை செய்துவந்ததும் தெரியவந்தது.

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

தப்பியோடிய தனியார் பேருந்து ஓட்டுநரான புஷ்பராஜ் என்பவரை கிண்டி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கேரளாவில் இளைஞர் மீது பெண் ஆசிட் வீசிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் வெளியாயின

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.