ETV Bharat / city

நாங்களும் கிருஷ்ணன் தான்..நெய் டப்பாவை திருடிய இளைஞர் - சிசிடிவி

கிருஷ்ணர் வெண்ணெய் திருடியது போன்று சூப்பர் மார்க்கெட்டில் இளைஞர் ஒருவர் நெய் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

நெய் டப்பாவை திருடிய இளைஞர்
நெய் டப்பாவை திருடிய இளைஞர்
author img

By

Published : Oct 13, 2022, 4:11 PM IST

சென்னை: கொரட்டுரில் இயங்கி வரும் வெங்கடேஸ்வரா சூப்பர் மார்க்கெட்டிற்கு நேற்று (அக்.12) இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அங்கு, பொருள்களை வாங்குவதுபோன்று சுற்றியுள்ளார். அப்போது, அங்கு பணிபுரியும் பணிப்பெண், பொருள்களை அடுக்கி வைத்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த இளைஞன் அங்கிருந்த நெய் டப்பாவை திருடியுள்ளார். பின்னர், மற்றபொருள்களை பார்ப்பது போன்று கடையிலிருந்து வெளியேறினார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பணிப்பெண்கள் இது குறித்து அங்காடி உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தனர்.

பின்னர், உரிமையாளர் கடையில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தார். அதில், அந்த இளைஞர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெளிவாக பதிவாகியிருந்தது. தொடர்ந்து இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நெய் டப்பாவை திருடிய இளைஞர்

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சூப்பர் மார்க்கெட்டிற்குள் கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என்பது கூட தெரியாமல் நெய் டப்பாவை திருடிச் சென்ற இளைஞரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருநங்கைகளை துன்புறுத்தி காணொலி வெளியிட்ட இருவர் கைது - முழுப்பின்னணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.