சென்னை : 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை நடத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதில் முக்கியமாக தேர்வை நடத்துவதற்கான முழுப்பொறுப்பும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களை சேர்ந்தது. அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், உரிய தேர்வுக்கால அட்டவணைகளைப் பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும், சம்பந்தப்பட்ட வகுப்பறைகளிலும் ஒட்ட வேண்டும்” என்பன போன்ற வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வு வழிமுறைகள்: தொடர்ந்து, 'ஒவ்வொரு வினாத்தாள் கட்டுக்காப்பு (பாதுகாப்பு) மையத்திலும் தேர்வுக்கால அட்டவணைகள் ஒட்டப்பட்டிருத்தல் வேண்டும். அனைத்து வினாத்தாள் பாதுகாப்பு மையங்களையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நேரிடையாக சென்று ஆய்வு செய்து, உரிய பாதுகாப்புடன் உள்ளதா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.
தேவையான அளவில் வினாத்தாள்பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் வினாத்தாள் கட்டுக்கள் வைக்கப்படும் அறையானது முழுவதும் மூடப்பட்ட நிலையிலும், ஜன்னல்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும். ஜன்னல்கள் இருப்பின் அவை உடனடியாக அகற்றப்பட்டு செங்கல் மற்றும் சிமெண்ட் கொண்டு அடைக்கப்படுதல் வேண்டும்.
இரட்டை பூட்டு: வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் போதுமான எண்ணிக்கையில் இரட்டை பூட்டு அமைப்பு கொண்ட இரும்பு அலமாரிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, அவ்வாறு இல்லையெனில் விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வினாத்தாள் பாதுகாப்புமையங்களில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும். பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும். வினாத்தாள் பாதுகாப்பு மையமாக உள்ள பள்ளி, தேர்வு மையமாகவும் இருப்பின்
தேர்வு மையத்திற்குத் தனிகாவலர் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
எழுத்துப்பூர்வ ஆணைகள்: வினாத்தாள் கட்டுக்களை பிரிக்காமல் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் வைத்திருக்க வேண்டும். எந்தவொரு தேர்வுப் பணி நியமனமு ஆய்வு அலுவலர்கள் தங்களது மாவட்டத்தில் எந்தவொரு தேர்வுப் பணி நியமனமும் விதிமுறைகளுக்குப் புறம்பாக இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
மேலும் எழுத்துப் பூர்வமான ஆணைகள் வழியாக மட்டுமே நியமனங்கள் செய்யப்பட வேண்டும். கண்டிப்பாக வாய்மொழி ஆணைகள் வழங்கக் கூடாது. மேலும், மாற்று ஆணை வழங்கும்போது சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: அரசுப் பள்ளியின் ஆசிரியர்களை மட்டுமே துறைத்தலைவராக நியமிக்க வேண்டும். தேவைப்பட்டால் அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியரை நியமிக்கலாம்' உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும்!