ETV Bharat / city

செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை

சென்னை: முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

mla
mla
author img

By

Published : Feb 6, 2020, 5:05 PM IST

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, 16 பேரிடம் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, 95 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர், செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூன்று பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்பிணை வழங்கியது. மத்தியக் குற்றப்பிரிவு முன்பு ஆஜராகி கையெழுத்தும் போட்டு வந்தார். இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஜனவரி 31ஆம் தேதியன்று செந்தில் பாலாஜிக்கு சொந்தமான கரூர், திருவண்ணாமலை, வீடுகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர். சென்னை வீட்டில் ஆள் யாரும் இல்லாததால் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. அதேபோல் இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய நபர்களின் 17 இடங்களிலும் சோதனை நடந்தது. இந்தச் சோதனையில் சொத்து ஆவணங்கள், தங்க நகை ரசீதுகள், கார், பைக் தொடர்பான ஆவணங்கள், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற பல்வேறு நபர்களின் விவரக் குறிப்புகள், நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை

மேலும், லேப்டாப், பென் டிரைவ், மெமரி கார்டு போன்ற தொழில் நுட்பம் சார்ந்த ஆவணங்கள் அனைத்தும் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 31ஆம் தேதி சீல் வைக்கப்பட்ட, சென்னை மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டை அவரது வழக்கறிஞர் முன்னிலையில் திறந்து இன்று காலை முதல் மத்தியக் குற்றப்பிரிவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பணம் பெற்றது தொடர்பான ஆவணங்களைத் திரட்டும் பணியிலும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் செல்போன் பயன்படுத்த தடை - வருமான வரித்துறை

Intro:Body:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் மத்திய குற்றபிரிவு போலீசார் சோதனை.

மோசடி தொடர்பான ஆவணங்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரம்.

தமிழக போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, செந்தில் பாலாஜி 16 பேரிடம் தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, 95 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு, வேலை வாங்கித் தராமல் மோசடிசெய்துள்ளதாக, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூன்று பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கியது. மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு ஆஜராகி கையெழுத்தும் போட்டு வந்தார். இந்நிலையில் இந்த மோசடி வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜனவரி 31 ஆம் தேதி அன்று செந்தில் பாலாஜிக்கு சொந்தமான கரூர், திருவண்ணாமலை வீடுகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.அதே போன்று இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய நபர்களின் 17 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் வாங்கிய ரசீதுகள்,கார் பைக் தொடர்பான ஆவணங்கள்,வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களின் விவர குறிப்புகள், நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள், கோடிகணக்கில் பெற்ற பணம் குறித்த விபரங்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் லேப்டாப் மற்றும் பென்ட் டிரைவ்,மெமரி கார்டு,அசல் சொத்து ஆவணங்கள், வங்கி காசோலை புத்தகங்கள், வங்கி கணக்குகள், இரும்பு பெட்டக சாவி இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். மேலும் தொழில் நுட்பம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தடவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சென்னை மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு கடந்த 31ஆம் தேதி மத்திய குற்றபிரிவு போலீசார் சீல் வைத்தனர்.இதற்கிடையில் இன்று காலை செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரின் முன்னிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வீட்டின் பூட்டை திறந்து சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் பணம் பெற்றதற்கு தொடர்பான ஆவணங்களை திரட்டும் பணியில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.