ETV Bharat / city

பொங்கல் தொகுப்பில் மக்களுக்கு ஷாக் - பொங்கல் தொகுப்பில் பணம் கிடையாது

ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில், கூட்டுறவு சங்கம் அனுப்பிய சுற்றறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ration card holders
ration card holders
author img

By

Published : Dec 23, 2021, 4:02 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்காக ரூ.1,160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணிகளை காண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை, கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட உள்ளது.

கடந்த ஆட்சியில் பொங்கல் தொகுப்பில் 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோல இந்தாண்டு பொங்கல் தொகுப்பிலும் ரொக்கம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, குடும்ப அட்டைக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படலாம் என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

திடீர் முடிவு

இப்படிபட்ட சூழலில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவது குறித்த சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், பொங்கல் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கபட்டிருந்தது. இதன்மூலம் பொங்கலில் ரொக்கம் வழங்கப்படும் என்ற தகவல் உறுதியானது.

இந்த நிலையில், அந்த சுற்றறிக்கை மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ரொக்கத் தொகை என்னும் வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக போல் திமுக அரசும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்- ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.