சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்ற போது பாதுகாப்பு பணியில் பஞ்சாப் மாநில அரசு அவரது உயிருக்கு தீங்கு விளைவிக்க முயன்றதாகக் கூறி, அந்த அரசைக் கண்டித்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று(ஜன.7) நடந்தது.
இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி தரவில்லை. ஆனால் அதை மீறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் என பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் பட்டினப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு உள்பட 153 பாஜகவினர் மீது பட்டினப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை பரப்பக்கூடிய கவனக்குறைவான செயலில் ஈடுபடுதல், கலைந்து செல்ல அறிவுறுத்தியும் மீறி போராட்டத்தில் ஈடுபடுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Covid Guidelines: காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள்