உரிய அனுமதியின்றி படிப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக போலி ஹோமியோபதி கல்வி நிறுவனம் மீது தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி பதிவாளர் புகாரளித்தார்.
இதன் அடிப்படையில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு எதிராக பாரம்பரிய மாற்று மருத்துவ ஹோமியோபதி படிப்பு என்ற பெயரில் பட்டப்படிப்பு நடத்துவதாக, கனக திருமேனி, கனக ஞானகுரு, பார்த்திபன் ஆகிய மூவர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜிகே கனக திருமேனி என்பவர் பெயரில் இயங்கும் இந்த கல்வி நிறுவனத்தில் ஒருநாள் வகுப்பு எடுப்பதாகக் கூறி போலி சான்றிதழ் வழங்கிவருகின்றது. இதற்காக 5500 ரூபாய் வசூலிக்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி பதிவாளர் ஆவுடையப்பன் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவினர் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: பருப்பு, பாமாயில் விநியோகம் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிப்பு