ETV Bharat / city

சசிகலா புஷ்பா வழக்கு: படுக்கையறை விவகாரம் - 2ஆவது கணவர் கொடுத்த புகார்

author img

By

Published : Feb 5, 2022, 6:55 PM IST

அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்பட மூவர் மீது ஜெ.ஜெ. நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சசிகலா புஷ்பா மீது 2 ஆவது கணவர் கொடுத்த புகார்

சென்னை: அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் ஜீவன் பீமா நகரில் வசித்துவருபவர் அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா. தற்போது பாஜகவில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.

இவரது இரண்டாவது கணவர் ராமசாமி (46) டெல்லி லோக் அதாலத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் ராமசாமி ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் கடந்த 13ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில், மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கிற்காக ஆஜராகிவிட்டு காரில் தனது மகளுடன் சென்னை வந்ததாகவும், சென்னை ஜீவன் பீமா நகரிலுள்ள தனது வீட்டிற்கு வந்து கதவை தட்டியபோது அமுதா என்பவர் கதவைத் திறந்தார்.

அப்போது வீட்டிற்குள் உணவுப் பொட்டலங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாகவும், மது வாடை வீசியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ள அவர், படுக்கை அறையில் தனது மனைவி சசிகலா புஷ்பா படுத்து இருந்ததாகவும், மற்றொரு அறையில் உள்ள படுக்கை அறையில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை புகார் மூலம் தெரிவித்திருந்தார்.

செல்போனில் வீடியோ எடுத்ததால், ஆபாசமாக திட்டி மிரட்டல்

இதனால் தான் அதிர்ச்சியடைந்து அந்த நபரை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும், அப்போது அந்த நபரும் அமுதா என்பவரும் தன்னை ஆபாசமாகத் திட்டி மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து தன்னை ஆபாசமாகத் திட்டி மிரட்டல்விடுத்த நபர்கள் மீதும், கணவன் என்ற முறையில் எனக்குத் தெரியாமல் அந்த நபர்களை வீட்டிற்குள் அனுமதித்த தனது மனைவி சசிகலா புஷ்பா மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும் புகாரில் தெரிவித்திருந்தார்.

அதன்பின் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெ.ஜெ. நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது முன்னாள் சசிகலா புஷ்பா, தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜா, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமுதா ஆகிய மூவர் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மிரட்டல், முறையற்று தடுத்தல் மற்றும் வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஐஐடி சென்னையில் சாதி பாகுபாடு: முன்னாள் உதவிப் பேராசிரியர் பிரதமருக்கு கடிதம்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.