ETV Bharat / city

நடராஜர் கோயிலில் போராட்டம் நடத்த தடை விதிக்க கோரிக்கை: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதி கோரி ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடராஜர் கோயிலில் போராட்டம் நடத்த தடை விதிக்க கோரிக்கை

author img

By

Published : Apr 9, 2022, 10:49 AM IST

சென்னை: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதி கோரி ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சிதம்பரத்தை சேர்ந்த ராமநாதன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், "தீட்சிதர்களை விரும்பாத ஒரு பிரிவினர், தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். கோயில் வளாகத்திற்கு அருகில் போராட்டம் நடத்தி கோயிலுக்கு வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக, கனகசபை மண்டபத்தை திறக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோரை வற்புறுத்துகின்றனர். இது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல்.

நடராஜர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டம் நடத்த அனுமதிக்கூடாது என மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் கோயில் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பொது தீட்சிதர் செயலாளருக்கும், விருத்தாச்சலத்தை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாறுதல்கள் குறித்து ஆலோசனை வழங்க நீதிமன்றம் உத்தரவு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.