கரோனாவைக் காரணம் காட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களையும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதனைக் கண்டிக்கும்விதமாக சென்னை பூக்கடையில் அமைந்துள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கோயில் அருகே அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் பி. செல்வம், நிர்வாகிகள் கராத்தே தியாகராஜன், நாராயணன் உள்ளிட்டோர் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் பாஜக மகளிர், தொண்டர்கள் சார்பாக அக்னி சட்டி ஏந்தியும், தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அண்ணாமலை, வினோஜ் பி. செல்வம் உள்பட 600 பேர் மீது வடக்கு கடற்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், தொற்று நோய்ப் பரவல் சட்டம் உள்பட ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறந்துவைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இதுமட்டுமல்லாது சிறுவர் சிறுமியர் பூங்காவையும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.
இதையும் படிங்க: BB DAY 3: கண்ணீர்ப் புரட்சி எபிசோட் - வலிகளில் வழிகண்ட நமீதா