ETV Bharat / city

கனிம வளங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் சி.வி. சண்முகம்

சென்னை: தொழில் துறை சார்பாக சுரங்கங்கள், கனிம வளங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று வெளியிட்டுள்ளார்.

சி.வி. சண்முகம்
author img

By

Published : Jul 11, 2019, 6:08 PM IST

இன்று சட்டப்பேரவையில் பேசிய சட்டம், நீதிமன்றங்கள் - சிறைச் சாலைகள் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சுங்கத் துறை அலுவலர்களுக்கும் புவியியல் துறை அலுவலர்களுக்கும் 26 லட்சம் மதிப்பில் கையடக்கக் கணினி வழங்கப்படும் என்றும் சுரங்கங்களைக் கண்காணிக்க ஆளில்லா சிறிய விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும் குவாரி தொழிலாளர்களும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் புவியியல், சுங்கத்துறை சார்பாக புதிய அலுவலகங்கள் கட்டித் தரப்படும் என்றும் உறுதியளித்தார். ஆய்வுப் பணிகளைத் திறம்படக் கையாளக் கூடுதலாக ஒரு இயக்குநர் பதவி உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Intro:Body:தொழில் துறை சார்பாக சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

புவியியல் மற்றும் சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரூ 26 லட்சம் மதிப்பில் கையடக்கக் கணினி வழங்குதல்

ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் சுரங்கங்களை கண்காணித்தல்

செயற்கைக்கோள் மூலம் சுரங்கங்களை கண்காணிக்கும் அமைப்பினை சிறு தனிமங்களுக்கும் அறிமுகம் செய்யப்படும்

குவாரி தொழிலாளர்களை தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்

சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை in இணை இயக்குனர் மண்டல அலுவலகத்திற்கு ரூபாய் 2 கோடி திட்ட மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டித் தரப்படும்

கனிம ஆய்வு பணியினை திறம்பட மேற்கொள்ள ஒரு கூடுதல் இயக்குனர் பணியை இடத்தினை பதவிநிலை உயர்வின் மூலம் உருவாக்குதல்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.