சென்னை மாநகராட்சியின் வருவாய்த் துறையால் 2019, 20ஆம் முதல் அரையாண்டில் சொத்து வரியாக ரூ. 607.38 கோடியும், தொழில் வரியாக ரூ. 201.59 கோடி என மொத்தமாக ரூ. 808,97 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது, கடந்த 2018, 19ஆம் அரையாண்டில் வசூலிக்கப்பட்ட சொத்து, தொழில் வரி மொத்தமாக ரூ.491.61 கோடி என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை மாநகராட்சியால் விதிக்கப்படும் சொத்து, தொழில் வரிகள் முறையாக செலுத்தப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்துவந்த நிலையில், கடந்த அரையாண்டை விட தற்போது கூடுதலாக சொத்து, தொழில் வரி வசூலாகியுள்ளது என்றாலும், இன்னும் நிலுவையில் உள்ள அனைத்து வரிகளையும் மாநகராட்சி முறையாக வசூலிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பாஜக-சிவசேனா இடையே தொகுதி பங்கீடு உறுதியானது!