பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று (ஜூலை 26)முதல் ஆகஸ்ட் 24 ந் தேதி வரையில் www.tneaonline.org or www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் வசதி துவக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜூலை 26 ந் தேதி முதல் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 26 ந் தேதி முதல் ஆகஸ்ட் 24 ந் தேதி வரையில் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வந்த பின்னர் இளங்கலை முதலாமாண்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பொறியியல் படிப்பில் 2021-22 ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான பணிகளை தொழில்நுட்பக் கல்வி கழகம் துவக்கி உள்ளது. பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு (ஜூலை 26) இன்று முதல் www.tneaonline.org or www.tndte.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
![பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் துவங்கியது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-be-btech-photo-7204807_26072021065446_2607f_1627262686_248.jpg)
மேலும் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு உதவும் வகையில் பொறியியல் கல்லூரிகளில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மாணவர்கள் விண்ணப்பம் செய்ய தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தரவரிசைப் பட்டியல்
மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்ற பின்னர் அவர்களுக்கான ரேண்டம் எண்களை ஆகஸ்ட் 25 ந் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 4 ந் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டமிட்டுள்ளது.
![பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் துவங்கியது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-be-btech-photo-7204807_26072021065446_2607f_1627262686_501.jpg)
![பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் துவங்கியது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-be-btech-photo-7204807_26072021065446_2607f_1627262686_574.jpg)
![பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் துவங்கியது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-be-btech-photo-7204807_26072021065446_2607f_1627262686_84.jpg)
இதையும் படிங்க : டோக்கியோ ஒலிம்பிக் 4ஆவது நாள் அட்டவணை: பத்து போட்டிகளில் இந்திய வீரர்கள்