ETV Bharat / city

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்

சென்னை: மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் 19ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

மருத்துவக் கல்வி இயக்ககம்
author img

By

Published : Aug 9, 2019, 5:41 AM IST

மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பி.ஏ.எஸ்.எல்.பி,( செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல் பட்டப்படிப்பு), பி.பி.டி, பி.எஸ்.சி ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ டெக்னாலஜி உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணி முதல் 19ஆம் தேதி வரை வழங்கபட உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

மேலும், www.tn.health.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களிலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், விண்ணப்பக் கட்டணமாக 400 ரூபாய் வங்கி மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம்

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் செயலர் தேர்வு குழு மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம் என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் வராத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் 9884224648, 9884224694, 9884224745, 9884224746 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Intro:பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்

Body:மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு
நாளை முதல் 19ஆம் தேதி வரை விண்ணப்பம்
சென்னை,
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி நர்சிங்,பி.பார்ம், பி .ஏ எஸ் .எல் பி,( செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல் பட்டப்படிப்பு), பிபிடி, பிஎஸ்சி ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ டெக்னாலஜி உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் நாளை காலை 10 மணி முதல் வரும் 19ம் தேதி வரை www.tn.health.org,www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பக் கட்டணமாக 400 ரூபாய் இணைய வங்கி சேவை மூலம் செலுத்தலாம்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர் தேர்வு குழு மருத்துவக் கல்வி இயக்ககம் கீழ்ப்பாக்கம் என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர் தாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
மேலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிப்பதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் 9884224648,9884224694,9884224745,9884224746 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.