சென்னை: விமான நிலையத்தில் பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்து ஒரு மாதமாக நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், விமான நிலைய இயக்குநர் சரத்குமார், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "விமான நிலையத்தில் பெண்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சி பெண்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
முதலமைச்சர் உத்தரவின் பேரில் அரசு மருத்துவமனைகளில் பெண்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அரசு மட்டுமே செய்ய முடியாது. தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் இதில் இணைய வேண்டும்.
அரசு மருத்துவமனைகள் மூலம் கிராமப் புறங்களில் உள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது' - துரைமுருகன்