முதலமைச்சர் பழனிசாமியின் வீடு சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அந்த அழைப்பில் பேசிய ஒருவர், முதலமைச்சர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்க இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், காவல் துறையினர் முதலமைச்சர் பழனிசாமி வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். அதில், வெடிகுண்டு ஏதும் இல்லாததால் இது பொய்யான தகவல் என்பதை உறுதி செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தொலைபேசியில் பேசியவர் யார், எங்கிருந்து பேசினார் என தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பப்பட்டதால் சென்னையில்பரபரப்பு ஏற்பட்டது.