இது குறித்து அவர் அறிக்கையில், "சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமியின் மறைவு தமிழுலகிற்கு பேரிழப்பாகும். சாயவனம் எனும் நாவல் மூலம் அறிமுகமென்றாலும், விசாரணை கமிஷன் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
தனக்கென்று மட்டும் வாழாமல், தன்னுடைய எழுத்துலகின் இதர எழுத்தாளர்களையும் சிறப்பிக்கும் விதமாக அசோகமித்ரன், ஜெயகாந்தன் ஆகியோரின் வாழ்வை குறும்படமாக்கி அவர்களை சிறப்பித்துள்ளார். சக கலைஞர்களை அரவணைக்கும் பண்பும், பெரிதோர் மனமும் கொண்ட எழுத்துச் சிற்பியின் மறைவு இழப்பீடு செய்ய முடியாதது.
அவரது மறைவிற்கு தமிழ்நாடு பாஜக சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரையும், அவரது எழுத்தினையும் இழந்து வாடும் அவரது இலக்கிய வாசகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சாகித்யா விருது வென்ற எழுத்தாளர் சா. கந்தசாமி காலமானார்