சென்னை பாடி சிவன் கோயில் அருகே நேற்று முன்தினம் நடந்த பாஜக விவசாய அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கேஸ் பலூன்கள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் மருத்துவர்களிடம் தேவையான சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.