ETV Bharat / city

' குற்றச்செயல்களை தடுப்பதில் காவல்துறை தோல்வி' - அண்ணாமலை - திமுக கருத்து சுதந்திரத்தை முடக்க எண்ணுகிறது

குற்றச்செயல்களை தடுப்பதில் தமிழ்நாடு காவல்துறை தோல்வி அடைந்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணாமலை காட்டம்
அண்ணாமலை காட்டம்
author img

By

Published : May 26, 2022, 7:03 AM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாஜக மத்திய சென்னை தலைவரான பாலசந்தர் நேற்று படுகொலை செய்யப்பட்டார். அவரது இல்லத்தில் பாலச்சந்தர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், "தமிழ்நாடு காவல்துறை குற்றச்செயல்களை தடுப்பதில் தோல்வி அடைந்து விட்டது. உளவுத்துறை முற்றிலும் செயல்படவில்லை. உயிரிழந்த பாலச்சந்தர் காவல் நிலையத்தில் மூன்று நாட்களுக்கு முன்னதாக கூட புகார் அளித்த நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் கூட அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம். தமிழ்நாட்டில் தினம் ஒரு கொலை என சர்வ சாதாரணமாக மக்கள் கூடும் இடங்களில் குற்றவாளிகள் முகக் கவசம் அணியாமல் கூட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை காவல்துறையில் வேடிக்கை பார்க்கின்றனர்.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்படுத்தும் கலாசாரம் அதிகரித்து விட்டது. குற்ற வழக்குகளில் 18 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். குற்றவாளிகள் பெயரளவிற்கு மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் 3 மாதத்தில் வெளியே வந்து விடுகின்றனர்.

சிறைச்சாலைகளில் குற்றங்கள் : தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என கூறும் முதலமைச்சர் அவரது குடும்பத்திற்கு தான் சிறப்பான பாதுகாப்பு உள்ளது. சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; அவ்வாறு இருந்திருந்தால் தற்போது ஒருவர் உயிரிழந்து இருக்க மாட்டார். தமிழ்நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் குற்றவாளிகள் குற்றங்களை மேலும், செய்ய தூண்டக்கூடிய வகையில் பல்கலைக்கழகம்போல் தெரிகிறது.

குற்றச்செயல்கள் : கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவரும் ஒருவர் வெளியே வந்த மூன்றாவது நாளில் மேலும் ஒரு கொலை சம்பவத்தில் ஈடுபடுகிறார். இவற்றை உளவுத்துறை கண்காணிக்கவில்லை. உள்துறை தனது வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினரை குற்றச் செயல்களை தடுக்க கூடிய வகையில் முனைப்புடன் செயல்பட உத்தரவிட வேண்டும். காதல் விவகாரங்களில் திமுக கட்சியினர் குறுக்கீடு இல்லாமல் இருக்கும்படி செய்ய வேண்டும்.

கருத்து சுதந்திரம் : திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கருத்து சுதந்திரம் பற்றி பேசிய நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர், கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கிறது. ஒரு தனி நபருக்கு ஆதரவாக இரவோடு இரவாக பத்திரிகையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் காவல்துறை யாருக்காக செயல்படுகிறது.

பாஜக துணை நிற்கும்: பத்திரிகை உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள் மீதும் ஜனநாயக ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும் வழக்கு தொடரக்கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி துணை நிற்கும்.

பெட்ரோல் விலையை மாநில அரசு குறைக்க தவறினால் மே31ஆம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு நடைபெறக்கூடிய போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்தார். நாளை (மே 26) சென்னை வரக்கூடிய பிரதமர் நரேந்திர மோடியை பாஜக நிர்வாகிகள் சந்தித்து கட்சியின் வளர்ச்சி பணிகள் தமிழ்நாடு அரசியல் நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் " என கூறினார்.

இதையும் படிங்க: தமிழணங்கா? "ஸ"மஸ்கிருத அணங்கா? - அண்ணாமலை அளித்த விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.