ETV Bharat / city

'மக்கள் மனதில் நஞ்சை விதைக்கிறார்': ஜெகத் கஸ்பர் மீது பாஜகவினர் புகார்! - கிறிஸ்தவ

இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியின மக்களை தனி நாடு கேட்குமாறு கருத்து பகிர்ந்து வரும் கிறிஸ்தவ பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சிறுபான்மை அணி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ பாதிரியார் மீது பாஜக வினர் புகார்

author img

By

Published : Jul 2, 2022, 7:31 PM IST

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்தவ பாதிரியாரான ஜெகத் கஸ்பர் ராஜ் மீது தேசவிரோத போக்கை கடைபிடிப்பதாக குற்றஞ்சாட்டி புகார் அளிக்கப்பட்டது.

புகார் அளித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சிறுபான்மை அணியின் மாநிலத்தலைவர் டெய்ஸி தங்கையா,'இந்தியாவில் உள்ள 40% இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் தனி நாடு கேட்க வேண்டும். இதனை பிரதமர் கொடுக்கவில்லை என்றால் அயல் நாடுகளை வலியுறுத்தி தனிநாட்டை கேட்டுப்பெறவேண்டும் என கிறிஸ்தவ பாதிரியாரான ஜெகத் கஸ்பர் ராஜ் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இது போன்ற சர்ச்சை கருத்துக்களை பாதிரியார் ஜெகத் கஸ்பர் ராஜ் பேசி வருகிறார். இதுபோன்ற தேசவிரோதப்போக்கை கடைபிடித்து பேசிவரும் கிறிஸ்தவ பாதிரியாரான ஜெகத் கஸ்பர் ராஜை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக்கூறினார்.

இதையும் படிங்க: ''மின் இணைப்பு துண்டிக்கப்படும்' எனக்கூறி எஸ்.எம்.எஸ் வந்தால் எச்சரிக்கையா இருங்க' - எச்சரித்த சங்கர் ஜிவால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.