ETV Bharat / city

கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது - அண்ணாமலை - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

காந்தியின் கொலைக்குக் காரணமான கோட்சேவை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை
author img

By

Published : Oct 1, 2021, 4:54 PM IST

சென்னை: கிண்டியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 'சாவர்க்கர் கன்ஸ்டன்ட் லெகசி' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அண்ணாமலை, புத்தகத்தை வெளியிட்டார்.

அப்போது மேடையில் பேசிய அவர், "நாட்டில் பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் சாதி தலைவர்களாக மாற்றி, தலைவர்களை எல்லாம் கூண்டுக்குள் அடைத்துவிட்டார்கள். இப்போது சாவர்க்கரின் புத்தகம் வந்துள்ளது.

பத்திரிகையாளர்களை மதிக்கக்கூடிய கட்சி பாஜக

திறந்த மனநிலையுடன் படித்துத் தலைவர்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வஉசி இழுத்த செக்கை என்னால் இழுக்க முடியாது, ஒரு துளி எண்ணெய் ஆனாலும் அது நாட்டுக்குப் பயன்படும் என்று செக்கு இழுத்தவர்” எனத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளரைச் சந்தித்த அவர், “ஹெச். ராஜா செய்தியாளர் குறித்த விமர்சனத்திற்குப் பதில் அளித்தவர், அவர் அற்புதமான மனிதர். அவரின் பேச்சுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியது தவறு என்றால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தோடு ஹெச். ராஜாவின் சர்ச்சைப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள். பத்திரிகையாளர்களை மிகவும் மதிக்கக்கூடிய கட்சிதான் பாஜக, நாங்கள் பத்திரிகையாளர்களை வைத்து எந்த இடத்திலும் அரசியல் செய்ததில்லை” என்றார்.

கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது

சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கேட்ட விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கேட்டவர் என சாவர்க்கர் அடையாளம் காட்டப்படுகிறார். சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கேட்டது உண்மைதான்.

ஆனால் அது அரசியல் ரீதியான ராஜதந்திரம். அதேநேரத்தில் காந்தியின் கொலைக்கும், அவருக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. சாவர்க்கர், காந்தியின் கொலையுடன் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளார்” என்றார்.

மேலும், “இந்து மகாசபையில் இருந்ததால் கோட்சேவை பாஜக ஆதரிக்கிறது என்கிறார்கள். காந்தியின் கொலைக்குக் காரணமான கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது. அனைவரும் மனம்திறந்து சாவர்க்கரைப் படிக்க வேண்டும்.

இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு அவரை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்பதை நாம் முடிவுசெய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ருத்ர தாண்டவம் அருமை - படக்குழுவைப் பாராட்டிய அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.