சென்னை: தி நகரில் உள்ள பாஜக தலைமை கழகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று (பிப். 4) செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டில் உள்ள நீட் விலக்கு மசோதா விவிகாரம் மற்றும் அது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர், பேசியாதாவது, "2017ஆம் ஆண்டில் அப்போதைய ஆளுநர் வித்யாசாகருக்கு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு, அவர் விளக்கம் கேட்டு அதனைத் திரும்பி அனுப்பி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அரசும் திரும்பப் பெற்றுக் கொண்டதை ஏற்று பதில் அனுப்பி உள்ளனர். 2017ஆம் ஆண்டு மே மாதம், குடியரசுத் துணைத் தலைவருக்கும் மசோத்தக்கள் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து திரும்பி வந்துள்ளது.
ஆளுநரின் விளக்கம்
இதனையெல்லாம் தமிழ்நாடு அரசு மறைத்து விட்டு, அதே மசோதாவை மீண்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு அனுப்பியுள்ளார். வேலூர் கல்லூரி தொடர்ந்த அந்த வழக்கில் நீட் தேர்வு யாருக்கும் எதிரானது அல்ல என்று நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்துள்ளது. மேலும், இது தொடர்பான எல்லா விவரங்களையும் தற்போதைய ஆளுநர் ஆர்.என். ரவி சுட்டிக்காட்டி, குறிப்பிட்டு தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
இதனையெல்லாம் தமிழ்நாடு அரசு ஏன் மறைக்கிறது. அத்துடன், தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இதன்மூலம் மருத்துவக் கல்லூரி எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வு தனியார் மருத்துவக் கல்லூரி நிறுவனங்களுக்கு எதிரானதுதான். அதனால், அதனைக் கடுமையான எதிர்க்கிறார்கள்.
வெள்ளை அறிக்கை
ஆளுநர் ஆர்.என். ரவி சொன்ன விளக்கங்களை மாநில அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அப்போது தான், அதன் உண்மைத் தன்மை தெரியவரும். ஆனால், இதனையெல்லாம் மறைத்து விட்டு, அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். இதன்மூலம் மு.க.ஸ்டாலின் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்.
தனியார்ப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளும் நமக்குத் தேவையானதுதான். அரசுப்பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறும் விகிதம் 8லிருந்து 16 ஆக உயர்ந்துள்ளது. பள்ளிகளின் தரத்தை உயர்த்த எந்த முயற்சியும் தமிழ்நாடு அரசு இதுவரை எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் சமூகநீதி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. எனவே, தமிழ்நாடு அரசு கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக பங்கேற்காது.
நீட் தொடர்பான தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது. பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். பள்ளிக்கான நிதியில், 8 விழுக்காடு மட்டுமே பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த ஒதுக்கீடு செய்கின்றனர். மீதமுள்ள தொகை ஆசிரியர்களின் சம்பளத்திற்கே போய் விடுகிறது" என்றார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் தமிழ் ஊடக செய்தி எதிரொலி - யானைகள் வழித்தடத்தை மறித்து கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடிப்பு