ETV Bharat / city

துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்வதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்வதற்கான சட்ட மசோதாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார்.

சட்டப்பேரவை
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப் பட்ட சட்ட மசோதாக்கல்
author img

By

Published : May 10, 2022, 10:53 AM IST

சென்னை: குஜராத், தெலுங்கானா, கர்நாடகா பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் இசைவுடன் வேந்தரால், துணை வேந்தரை நியமனம் செய்வதற்கு அம்மாநிலத்தில் உள்ள சட்டங்கள் வழிவகை செய்துள்ளது. இதே போல தமிழ்நாட்டிலும், 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் சட்டத்தினை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்வதாக சட்டமுன்வடிவில் தெரிவித்துள்ளது.

இச்சட்டத் திருத்ததின்படி வேந்தர் என்பதற்கு பதிலாக அரசு என்ற சொற்றொடர் மாற்றம் செய்யப்படுவதாகவும், துணை வேந்தர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாலோ, மீறினாலோ துணை வேந்தரை பதவியில் இருந்து நீக்ககூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தரின் விளக்கத்தை கேட்கும் விதமாக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் அல்லது, அரசு தலைமைச் செயலாளருக்கு குறையாத ஒரு அலுவலரை கொண்ட ஒருநபர் விசாரணை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டதிருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பு காவல் சிறைவாசிகளின் நெருங்கிய உறவினர்களின் இறப்பில் பங்குபெற நிபந்தனையுடன் தற்காலிக விடுப்பது கொடுப்பது குறித்து மாவட்ட அளவில் அதிகார அமைப்பு ஒன்று முடிவு செய்ய வழிவகை செய்யும் சட்ட மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ளார்.

1982ம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினி வெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 14/1982) 15ம் பிரிவானது, மாநில அரசு, எந்த நேரத்திலும் தடுப்புக் காவல் ஆணைக்கிணங்கி தடுப்புக் காவலிலுள்ள நபர் ஒருவரையும், குறிப்பிட்ட கால அளவிற்கு, நிபந்தனைகளின்றி அல்லது அந்த நபர் ஏற்றுக்கொள்ளும் ஆணையில் குறிப்பிடப்பட்ட அத்தகைய நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கலாம் என்றும், எந்த நேரத்திலும் அவரது விடுவிப்பினை ரத்து செய்ய வகைசெய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தடுப்புக் காவல் சிறைவாசிகள் அல்லது அவர்களது உறவினர் போன்றவரிடமிருந்து அவரது இரத்த சொந்தங்களின் திருமணத்தில் பங்குபெற, தடுப்புக்காவல் சிறைவாசிகளின் உடல்நலமின்மைக்கு சிகிச்சை பெற, நோய்வாய்ப்பட்ட இரத்த சொந்தங்களுடன் இருக்க மற்றும் நெருங்கிய உறவினர்களின் இறப்பு அல்லது இறுதிச்சடங்கில் பங்குபெற மாநில அரசினால் முறையீடுகள் பெறப்பட்டு வருவதாகவும், தீவிரமான முயற்சிக்குப் பின்னும் பின்பற்ற வேண்டிய நிர்வாக நடைமுறைகள் காரணமாக அரசு அளவில் முறையீடுகள் உரிய நேரத்தில் தீர்வு செய்ய இயலவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பு காவல் குற்றவாளிகள் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இறப்பில் கலந்து கொள்வதற்கு தற்காலிகமாக விடுவிப்பினை வழங்குதல் தொடர்பான அதிகாரங்களை மாவட்ட அளவிலான அதிகார அமைப்பு ஒன்றிற்கு ஒப்படைவு செய்ய பரிந்துரைத்துள்ளது என்றும் சட்டமசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நான்கு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 'பெண்களுக்குப் பாதுகாப்பு தரக்கூடிய அரசு திமுக தலைமையிலான அரசு' - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.