ETV Bharat / city

7.5 % ஒதுக்கீடு வழங்கும் சட்டமுன்வடிவு - அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் - 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் சட்டமுன்வடிவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவினை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்வதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

tamilnadu cabinet meeting resolutions
tamilnadu cabinet meeting resolutions
author img

By

Published : Aug 4, 2021, 7:54 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுமென்று, ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவாறு, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவர்களை தொழிற்படிப்புகளில் சேர்க்க புதுயுக்தி

கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதற்குத் தடையாகவுள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை பரிந்துரைகளை செய்திடவும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.

தமிழ்நாடு பட்ஜெட் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கலாகிறது; விவசாயத்திற்குத் தனி பட்ஜெட்

அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு வழங்கியதைப்போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 விழுக்காடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.