சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் நடைபெற்றுவருகிறது. இந்த முறை பல்வேறு கலைஞர்கள் போட்டியாளர்களாக இடம் பெற்றுள்ளனர். அப்படி மொத்தமாக 18 பேர் கொண்டு வரப்பட்டனர். ஆனால், ஒரு வாரத்திலேயே நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறிவிட்டார்.
இதனால் அவரது ரசிகர்கள் தாமரைச்செல்வியின் பக்கம் திரும்பிவிட்டனர். இதனிடையே, நாடக நடிகையான தாமரைச்செல்வி பிக்பாஸ் வீட்டில் மிகவும் அப்பாவியாகவும், வெள்ளேந்தியான கிராம பெண்ணாகவும் பார்வையாளர்களுக்கு காணப்பட்டுவருகிறார்.
இப்படி இருக்கையில், தாமரைச்செல்வி முன்னதாக நடித்திருந்த நாடகங்களின் வீடியோக்கள் திடீரென இணையதளங்களில் வைரலாக வருகின்றன. அதில், காமெடியாக சக நாடக கலைஞர்களிடம் பேசும் காட்சிகள், அற்புதமான நடனக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் லிப் டூ லிப் - வைரலாகும் வீடியோ