ETV Bharat / city

படப்பிடிப்பு கட்டண குறைப்பு விவகாரம்; புதுச்சேரி முதலமைச்சர், பாக்யராஜ் சந்திப்பு! - bhagyaraj meets cm rangasamy

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி முதலமைச்சர் ரங்கசாமியை, இயக்குநர் பாக்யராஜ் நேற்று (டிசம்பர் 14) நேரில் சந்தித்து பேசினார்.

படப்பிடிப்பு கட்டண குறைப்பு விவகாரம்; புதுச்சேரி முதலமைச்சர், பாக்யராஜ் சந்திப்பு!

author img

By

Published : Dec 15, 2021, 8:05 AM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகின்றது. இங்கு படப்பிடிப்பு கட்டணம், பிற மாநிலங்களை விட மிகக்குறைவு என்பதால் பெரும்பாலான திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இயக்குநர் பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் 369 திரைப்படத்தின் படப்பிடிப்பு, பிள்ளையார் குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இத்திரைப்படம் கின்னஸ் உலக சாதனைக்காக 90 நிமிடம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்க பாக்கியராஜ் உள்ளிட்டோர் நேற்று (டிசம்பர் 15) புதுச்சேரி வந்திருந்தனர். இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை, பாக்யராஜ் நேற்று (டிசம்பர் 14) நேரில் சந்தித்தார்.

அப்போது புதுச்சேரியில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள நகராட்சி படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க அவர் கோரிக்கை விடுத்தார். புதுச்சேரியில் படப்பிடிப்பு கட்டணம் நாளொன்றுக்கு ரூ. 28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஆதாரமில்லாத கருத்தைப் பரப்புகிறார் அண்ணாமலை': திராவிடர் கழகத்தினர் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.